நிவாரண உதவி வழங்கிய டி.ராஜேந்தர் திடீர் மயக்கம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக தூத்துக்குடிக்கு நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் நேற்று வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, “முன்பு டி.ஆராக இருந்த நான், தற்போது இறையடியாராக மாறிவிட்டேன். பெரிய உதவி செய்யக் கூடிய அளவுக்கு நான் பெரிய ஆள் அல்ல. இதில் அரசியல் சாயம் பூசிக் கொள்ளவும் இல்லை. அரசியலை மறந்து, வேறொரு வாழ்க்கை வாழ்கிறேன். எனது மகன் எஸ்டிஆர் ரசிகர் மன்றம், டி.ஆர் மன்றம் சார்பில் இந்த உதவிகளை செய்து வருகிறோம்” என்றார்.

பின்னர் அவர் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்தார். ரசிகர்கள் அவரை தாங்கிப் பிடித்து அருகில் இருந்த நாற்காலியில் அமரவைத்து, முகத்தில் தண்ணீர் தெளித்தனர். மயக்கம் தெளிந்த பின்னர் டி.ராஜேந்தர் அங்கிருந்து காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்