88.52 ஏக்கரில் 2310 பேருந்துகளை இயக்க வசதி - கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிலவிவரும் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கிலும், கடந்த 2018-ம்ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி அமைந்த பிறகும், பேருந்து நிலையத்துக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. பணி முடிவடையும் நிலையில், பேருந்து நிலையப் பகுதியில் மழைநீர் அதிக அளவில் தேங்கியது. இதையடுத்து, சிஎம்டிஏ சார்பில் புதிய திட்டம் வகுக்கப்பட்டு, மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. நிலையத்துக்குள் பேருந்துகள் வந்து செல்லும் பாதையில் சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பணிகளும் முடிந்ததை தொடர்ந்து, சமீபத்தில் வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டு, பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு தயாரான நிலையில் இன்று பேருந்து முனையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், எஸ்எஸ்.சிவசங்கர், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, திமுக எம்பி டிஆர் பாலு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்றிருந்தனர்.

‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’: கிளாம்பாக்கம் பேருந்து முனையமானது ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று திறப்பு விழாவை முன்னிட்டு பேருந்து முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் திறந்துவைத்து, மரியாதை செலுத்தினார். பேருந்து சேவையையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக பேட்டரி காரில் பேருந்து முனையத்தை அமைச்சர்களுடன் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.

பேருந்து முனைய வசதிகள்:

இன்றே செயல்பாட்டுக்கு வந்தது: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையமானது இன்றிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இங்கிருந்தே இயக்கப்படவுள்ளது. எனவே மாநகர பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்ல எதுவாக சென்னை மாநகரின் பல்வேறு இடங்களுக்கும் 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படவுள்ளது. இரவு நேரப் பேருந்துகளுக்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE