மதுரை: மதுரை அவனியாபுரம் பகுதி தேமுதிக சார்பில், விஜயகாந்த் உருவப் படத்துக்கு கட்சி நிர்வாகிகள், மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவனியாபுரம் பகுதி செயலர் செந்தில், 100-வது வட்ட செயலாளர் வெற்றி மற்றும் கட்சியினர் முருகேசன், தவமணி உள்ளிட்டோர் முடியிறக்கி அஞ்சலி செலுத்தினர்.
மதுரை காளவாசல் பகுதியில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில், விஜய காந்த் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். சங்க பொதுச் செயலாளர் வினோத், கருமாத்தூர் மணிமாறன், பாடகி பத்மஜா, இளங்கோவன் கார்மேகம், நடன கலைஞர் பரவை மணி, மகளிர் அணி தலைவி சுமதி, சங்க மேலாளர் பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி அருகே நடிகர் சூரி நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. விஜயகாந்த் மறைவையொட்டி உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. பின்னர் சூரி உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர், விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி, ‘விஜயகாந்துடன் பணியாற்றி இருக்கிறேன். கேப்டன் எனும் வார்த்தைக்கு 100 சதவீதம் பொருத்தமானவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago