குமரியில் சூறைக்காற்று - விவேகானந்தர் பாறைக்கு 6 மணி நேரம் படகு சேவை ரத்து

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் மீன் பிடி பணிகள் பாதிக்கப்பட்டது.

வழக்கத்தைவிட குறைவான அளவு மீனவர்களே பைபர் படகு மற்றும் நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். அதே நேரம் விசைப் படகுகளும் குறைந்த அளவில் கடலுக்கு சென்று மீன் பிடித்தன. கடந்த 3 தினங்களாக காற்றால் கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால் மீன்கள் வரத்து குறைந்து குமரி மாவட்டத்தில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது.

தற்போது பண்டிகை சீஸன் மற்றும் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று காலையில் இருந்து சூறைக்காற்றால் கடல் நீர்மட்டமும் தாழ்வாக காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு நுழைவு வாயில் மூடப்பட்டது.

படகு பயணம் செய்வதற்காக அதிகாலை முதல் வரிசையில் நின்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மதியம் 2 மணியளவில் கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங் கியது. 6 மணி நேரம் படகு சேவை ரத்தானதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்