சென்னை: விஜயகாந்த் மறைவுக்கு தமிழகம், புதுச்சேரி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: சிறந்த நடிகரும், அர்ப்பணிப்பு மிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான விஜயகாந்தின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி .
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: ஒரு அரசியல் தலைவராக தனது ஆளுமையாலும், மனிதாபிமானம் மிக்க பண்புகளாலும் பலரது இதயங்களுக்கு நெருக்கமான ஒரு நல்ல மனிதர். வாழ்நாளில் இன்னும் பல உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவர். அவரது இழப்பு அரசியல் களத்துக்கும், திரையுலகத்துக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு.
ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்: எனது நண்பர், மனிதநேய மிக்க சிறந்த மனிதர், சிறந்த கலைஞர், ஏழை எளிய மக்களின் நலனுக்காக தன்னை என்றும் அர்ப்பணித்தவர். அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago