தமிழக அரசியல் வரலாற்றில் திரைப் பிரபலங்கள் நுழைவது புதிதல்ல. இருப்பினும் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு யாரும் அவ்வளவு பெரிய உயரத்தை எட்டியிருக்கவில்லை. எம்ஜிஆருக்கு முன்பே அண்ணாவும், கருணாநிதியும் திரைத்துறையின் மூலம் மக்களிடம் அறிமுகமாகி அரசியலில் தடம் பதித்திருந்தனர். அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதாவும், திமுக தலைவரான கருணாநிதியும் தீவிர அரசியலில் இருந்த காலத்திலேயே துணிச்சலாக அரசியலுக்கு வந்தவர் கேப்டன் விஜயகாந்த்.
இந்தச் சூழ்நிலையில்தான், 2005-ம் ஆண்டு மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடத்தி, தனது ரசிகர்களின் ஆதரவோடு விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கி இருந்தார். கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டே, அதாவது 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
2006 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக கட்சி ஆரம்பித்து ஓராண்டுக்குள்ள தேர்தலை சந்தித்து ஒட்டுமொத்தமாக 10 சதவீத வாக்குகளைப் பெற்று அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இத்தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்திருந்தார்.
2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில், தேமுதிக அதிமுக கூட்டணியில் சேர்ந்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், 29 தொகுதிகளில் வெற்றிபெற்ற தேமுதி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து தேமுதிக இந்தத் தேர்தலில், 44.95 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. அந்தத் தேர்தலில், சென்னை எழும்பூர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக சார்பில் அந்த தேர்தலில், 5 முறை தொடர் வெற்றிகளைக் கண்டிருந்த பரிதி இளம்வழுதி. எழும்பூர் தொகுதி தனி தொகுதி வேறு. அந்த சமயத்தில் தேமுதிக சார்பில் களம் இறக்கப்பட்டவர்தான் நல்லதம்பி.
» மழை வெள்ளத்தால் சேதமடைந்த நெல்லை வண்ணார்பேட்டை ஆற்றுப்பாலம் சீரமைக்கப்படுமா?
» வீதியில் குப்பை கொட்டுவதை தடுக்க மாற்றி யோசித்த தூய்மைப் பணியாளர்கள் @ திருச்சி
தேர்தல் அரசியலில் சென்னை திமுகவின் கோட்டை என்ற நிலைதான் இருந்து வந்தது. குறிப்பாக எழும்பூர் தொகுதி 1967, 71, 77, 84, 89, 91, 96, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்தனர். அதிலும், 1989-ம் ஆண்டு துவங்கி 2006 வரையிலான 5 சட்டமன்ற தேர்தல்களில் திமுகவின் பரிதி இளம்வழுதியே தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார். இதனால், திமுக இந்த தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி என்று கணிக்கப்பட்டிருந்தது.
சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த நல்லதம்பி, சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்தார். இதனால் பணபலம் கொண்ட அரசியல் களத்தில் போட்டியிடப்போவதை நினைத்து வருந்தினார். இந்த சமயத்தில், அவருக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுத்து, தைரியம் கொடுத்து களத்தில் போட்டியிடச் செய்தவர் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த். அந்தத் தேர்தலில், அதுவரை திமுகவின் கோட்டையாக கருதப்பட்ட எழும்பூர் தொகுதி தேமுதிக வசமானது.
நல்லதம்பி 51,772 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி 51,570 வாக்குகள் பெற்றிருந்தார். 202 வாக்குகள் வித்தியாசத்தில், தேமுதிக வேட்பாளர் வெற்றி பெற்றார். தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மத்தியில், தன்னை நம்பி வந்தவர்களையும் வெற்றி பெறச் செய்து, அரியணையில் ஏற்றியவர் விஜயகாந்த்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago