சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது.
மதுரையில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே தலைநிமிர செய்த பெருமைக்குரியவர். ஏழை, எளிய மக்களின் பசி போக்கிய வள்ளல். தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். ஐயா ஜி.கே.மூப்பனாரோடு மிகுந்த மரியாதை கொண்டவர். ஜிகே வாசனோடும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர். நான் 2010ல் இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நல்ல நட்போடு எனக்கு அரசியல் ஆலோசனை வழங்கியவர்.
கேப்டன் விஜயகாந்த்தை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago