சென்னை: மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் 15 தொகுதிகள் குறித்த பட்டியலை டெல்லி பொறுப்பாளர்களிடம் நாளை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கிடையில் இண்டியா கூட்டணி சார்பில் தலைவர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வரும் 30-ம் தேதி டெல்லியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திமுக சார்பில் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் மாநில அளவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் பட்டியலை தயார் செய்யுமாறு மாநில பொறுப்பாளர்களுக்கு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தியுள்ளார். அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை (டிச.29) டெல்லியில் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் முகுல்வாஸ்னிக் தலைமையில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மாநில அளவில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்த பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. இதற்காக நாளை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், செல்லகுமார் ஆகியோர் கொண்ட குழு டெல்லி செல்கிறது. இதில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய்யும் பங்கேற்கிறார்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் 15 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கே.எஸ்.அழகிரி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago