மதுரை: திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மதுரையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனை மற்றும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சென்றனர்.
ஆனால், அமலாக்கத் துறை அதிகாரிகள் அவர்களை தடுத்தனர். பின்னர், உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று,லஞ்ச ஒழிப்பு போலீஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சோதனையின்போது தங்களது கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக, மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன், அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தல்லாகுளம் போலீஸில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே 2 முறை சம்மன் அனுப்பினர். ஆனால், அமலாக்கத் துறைஅதிகாரிகள் போலீஸாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், காவல் துறைஉயரதிகாரிகளின் ஆலோசனைப்படி, மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு பதிவுத்தபாலில் சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதன்படி நேற்று முன்தினம் சம்மனை அனுப்பியதாக காவல் துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago