ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் தைப்பூசவிழாவை நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர். பழநி மலையடிவாரத்தில் கிரிவீதிகளில் காவடி எடுத்து ஆடியும், பக்திப்பாடல்களைப் பாடியும் தைப்பூசவிழாவை கொண்டாடிவருகின்றனர். அரோகரா கோஷத்துடன் மலைக்கோயிலுக்கு சென்று தண்டாயுதபாணிசுவாமியை நீண்டவரிசையில் காத்திருந்து வழிபட்டுவருகின்றனர். பக்தர்கள் கூட்டத்தில் பழநி நகரமே திணறிவருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்த சஷ்டிவிழா, கார்த்திகை விழா, பங்குனி உத்தரம் என பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தைப்பூச விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்கு காரணம் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து விரதமிருந்து பாதயாத்திரையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று முருகப்பெருமானை வழிபடுவது தான்.
பத்து நாட்கள் நடைபெறும் தைப்பூச விழாவின் முதல்நாளான கொடியேற்றம் நடைபெற்றவுடன் பக்தர்கள் பாதயாத்திரைக்கு தயாராகினர். மதுரை, சிவகங்கை, தேனி, திருச்சி, திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கலம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் பாதயாத்திரையாகப் பயணித்து பழநியை அடைகின்றனர். இந்தப் பழக்கம் தொன்று தொட்டு மூதாதையர் காட்டிய வழியில் திருத்தலப் பயணமாக மேற்க் கொள்ளப்படுகிறது.
தைப்பூசவிழா கொடியேற்றம் துவங்கியது முதல் பழநிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வருகை அதிகரிக்கத்துவங்கியது. அதிகமானோர் தைப்பூச தேரோட்டம் நடைபெறும் நாள் அன்று சுவாமி தரிசனம் செய்ய விரும்பி அன்று பழநியைச் சென்றடையும் வகையில் தங்கள் பாதயாத்திரை பயணத்தை அமைத்துக்கொண்டதால் பழநியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
பலர் குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு சுவாமியை தரிசிக்க வந்துள்ளனர். தங்கள் நேர்த்திக்கடனாக சிலர் காவடி எடுத்து வந்து வழிபட்டுவருகின்றனர். விழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் மலைக்கோயிலில் அதிகளவில் காணப்படுவதால் நீண்டவரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சுவாமிதரிசனம் செய்துவருகின்றனர்.
பழநியில் பத்துநாட்கள் நடைபெறும் தைப்பூசவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெறுகிறது. ரதவீதிகளில் வள்ளி,தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி வீற்றிருக்கும் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபடவுள்ளனர்.
பண்டைய காலம் முதல்
தொடரும் பாதயாத்திரைவழிபாடு
பழநியில் நடைபெறும் தைப்பூச விழாவிற்கு பக்தர்கள் பாதயாத்திரையாகச் சென்று முருகப்பெருமானை வழிபடுவது என்பது பண்டைய காலம் முதல் தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கம்.
முன்னோர்கள் காட்டிய வழியில் இன்றும் இந்த திருத்தலபயணத்தை மக்கள் தொடர்ந்து வருகின்றனர்.
பாதயாத்திரை குறித்து சங்க இலக்கியங்களில் திருத்தலப்பயணம் மேற்கொள்ளுதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருந்தாலும் மூன்றாம்படை வீடான பழநிக்கு தான் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபட்டுவருகின்றனர். இது பழநி திருத்தலத்திற்கே உள்ள சிறப்பம்சம். வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பழநியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள தமிழக நகரங்களில் வசிப்பவர்கள் ஒட்டன்சத்திரம் சென்று அங்குள்ள குழந்தை வேலப்பர் கோயிலில் இருந்து தங்கள் பாதயாத்திரையை துவக்குகின்றனர். பழநிக்கு பாதயாத்திரையாக சென்று வழிபடுவது என்பது 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழக்கத்தில் உள்ளதாக கோயிலில் உள்ள பட்டயங்களில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago