தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் விவசாய பயிர்கள் சேதமடைந்தன.
குருவி குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேதங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச் சந்திரன், தென்காசி தொகுதி எம்பி தனுஷ் எம்.குமார், சங்கரன் கோவில் தொகுதி எம்எல்ஏ ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் இதுவரை 228 கிராமங்களில் மழைச் சேதங்கள் ஆய்வு செய்யப் பட்டுள்ளன. 18,077 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 16 கோடி ஆகும். இதனால் 25,089 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மழையால் மனித உயிரிழப்பு இல்லை. 2 பேர் காயமடைந்தனர். 5 ஆடு, மாடுகள், 4,800 கோழிகள் உயிரிழந்துள்ளன. 92 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன.
200 வீடுகள் பகுதியாக இடிந்துள்ளன. எந்த ஒரு விவசாய நிலங்களும் கணக்கெடுப்பில் விடுபடாமல் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து, விவசாயிகளை சந்தித்து வருகிறோம். விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் அடிப்படையில் உரிய நிவாரணம் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சங்கரன் கோவிலில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட சுமார் 300 பேருக்கு 5 கிலோ அரிசி, காய் கறிகள், போர்வை உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் வழங்கினார். வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கனகம்மாள், வேளாண் உதவி இயக்குநர்கள் சங்கர், ஞானசுந்தரி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சங்கர பாண்டியன், நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago