பாதிப்புகள் பலமடங்கு இருப்பதால் போதிய நிதி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: மாநில பேரிடர் நிவாரண நிதியில் குறைந்த அளவான நிதியே இருக்கும் நிலையில், பாதிப்புகள் அதைவிட பலமடங்கு மிகுதியாக உள்ளதால், மத்திய அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

நாட்டிலேயே 2-வது நீண்ட கடலோர பகுதிகளை கொண்டுள்ளதுடன், கடந்த நூற்றாண்டுகளில் 50 புயல்களை எதிர்கொண்டுள்ள தமிழகம், தொடர்ந்து இத்தகைய இயற்கைச் சீற்ற ஆபத்துகளுக்கு உள்ளாகி வருகிறது. மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுடன், தென்மாவட்டங்களில் பெய்த அதிகனமழையும் பெரும் சேதம் விளைவித்துள்ளது.

மாநில பேரிடர் நிவாரண நிதியில் குறைந்த அளவான நிதியே உள்ள நிலையில், பாதிப்புகள் அதைவிட பலமடங்கு மிகுதியாக உள்ளது. எனவே, இதுவரை இல்லாத அளவிலான இந்த சூழலை தமிழகம் எதிர்கொள்ள மத்திய அரசு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என்று அக்கறையுடன் கோருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்