சென்னை: வெள்ள நிவாரண நிதிக்கு ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை வழங்க வற்புறுத்தக் கூடாது என போக்குவரத்துத் துறை செயலருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில் சம்மேளன பொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளத்தில் ஒருநாள் அல்லது கூடுதல் நாளுக்கான சம்பளத்தை டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் பிடித்தம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் ஊழியர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால், போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகங்களில், உயர் அதிகாரிகள் தொழிற்சங்க தலைவர்களை கைபேசியில் அழைத்து சங்க லெட்டர்பேடில் ஊதிய பிடித்தம் செய்ய கடிதம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்துவதாக அறிகிறோம். எனவே, வெள்ள நிவாரண நிதி சம்பளத்தில் பிடித்தம் செய்ய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல ஊழியர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே பிடித்தம் செய்யப்பட வேண்டும். ஊழியர்களை வற்புறுத்தக் கூடாது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago