திருச்சி: பீக் ஹவர் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (டிச.27) தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முகில்பெ.ராஜப்பா, டி.மோகன், டி.திருமுருகன், முகமதுஜான், இளவேந்தன் ஆகியோர் திருச்சியில் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதாவது:
2022-ல் மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு, மறைமுகமின் கட்டணங்களால் தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன இதனால்பலரும் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் மின் கட்டண உயர்வு உள்ளது.
குறிப்பாக, மின்சார நிலைக் கட்டணம் 430 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் இயங்கினாலும், இயங்காவிட்டாலும் இந்த நிலைக் கட்டணத்தை உரிமையாளர்கள் செலுத்தியாக வேண்டும். எனவே, நிலைக் கட்டணஉயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.
» தொழிற்சாலையில் வாயுக் கசிவு: எண்ணூர் அருகே கிராம மக்களுக்கு உடல்நல பாதிப்பு
» நிறுவனம் நடத்தி முறைகேடு: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது
‘பீக் ஹவர்’ நேரத்துக்கான 15 சதவீதம் சர்-சார்ஜை திரும்பப் பெற வேண்டும். தொழில் கூடங்கள் மேற்பகுதியில் சோலார் பேனல்அமைக்க துணைக் கட்டணம் வசூலிப்பதை திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். தற்போது8-ம் கட்டமாக மாநிலம் முழுவதும்மாவட்டத் தலைநகரங்களில் டிச. 27-ம் தேதி (இன்று) மனித சங்கிலிப் போராட்டம் நடத்த உள்ளோம். திருச்சியில் அரியமங்கலம் முதல் துவாக்குடி வரை 12 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும் இந்தப் போராட்டத்தில் 5,000 பேர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago