என்னை காயப்படுத்துபவர்கள் சரியும் சரித்திரத்தை எழுதுவேன்: தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: என்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்துபவர்கள் சரியும் சரித்திரத்தை நான் எழுதுவேன் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மக்களின் துயரத்தைக் கண்டு துயருற்று, மக்களின் குரலாய் பேசியதற்காக, திண்டாடும் மாடலை வைத்து திண்டாடிக் கொண்டிருப்பவர்கள், என்னை சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் மக்கள் விரோத ஆணவ சாம்ராஜ்யம் சாயப் போகிறது, சரியப் போகிறது. இது சபதம். அதிகாரத்தில் ஆணவ ஆட்டம் போட்டவர்கள், ஆடி ஒடுங்கியிருக்கும் சரித்திரத்தை நான் இங்கு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

சமூக வலைத்தளங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் காயப்படுத்துங்கள். நீங்கள் சரியும் சரித்திரத்தை எழுத நான் தயார். இவ்வாறு அறிக்கையில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்