சேலம்: சேலம் மாநகராட்சி குஞ்சான்காடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கோயிலை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் பொதுமக்களை அப்புறப்படுத்திய நிலையில் கோயில் இடித்து அகற்றப்பட்டது.
சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை அருகே குஞ்சான் காடு பகுதியில் சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறாக ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் இருந்தது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் குஞ்சான் காடு பகுதியில் சாலையில் உள்ள கோயிலை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்துடன் கோயிலை அகற்றும் முயற்சியில் நேற்று ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோயிலை அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து, போலீஸார் உதவியுடன் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய அதிகாரிகள் கோயிலை இடித்து அகற்றினர். தொடர்ந்து குஞ்சான்காடு பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago