கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் டிச.30-ல் திறந்து வைக்கிறார்

By செய்திப்பிரிவு

வண்டலூர்: வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில், டிச. 30-ம் தேதி புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதுதொடர்பாக கூடுவாஞ்சேரியில் இன்று திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.400 கோடி மதிப்பீட்டில் இப்பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, 100 அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன் தினம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, பொங்கலுக்கு முன்னதாக இப்பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து சிஎம்டிஏ அதிகாரிகளுடன் நேற்று அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதில் டிச.30-ம் தேதியே பேருந்து நிலையத்தை திறப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது தொடர்பாக திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று மாலை பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 secs ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்