சென்னை: புதிய வகை கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள 1.5 லட்சம் ஆர்டிபிசிஆர் உபகரணங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா மற்றும் தமிழகத்தில் ஜேஎன்.1 வகை கரோனா வைரஸ் தொற்றுஇருப்பதை மத்திய அரசு உறுதிபடுத்தியுள்ளது.
மத்திய அரசு அறிவுறுத்தல்: கரோனா பரவல் குறித்து மாநிலஅரசுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள மத்திய சுகாதாரத் துறை, அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்துமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலையில் தினமும் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மழை மற்றும் குளிர் காலங்களில் கரோனாவை போலவே அறிகுறிகள் கொண்ட இன்ஃப்ளூயன்சா, டெங்கு, சிக்குன்குனியா தொற்றுகள் அதிகமாகப் பரவுகின்றன. தமிழகத்தில் கரோனா பாதிப்பு கட்டுக்குள்தான் உள்ளது.ஆனாலும், அறிகுறிகள் உள்ள வர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரி சோதனை செய்யப்படுகிறது. அதற்காக 1.5 லட்சம் உபகரணங்கள் இருப்பில் வைக்கப்பட் டுள்ளன.
மாவட்டங்களுக்கு வழங்கல்: சென்னையில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான உபகரணங்கள் உள்ளன. மாவட்டங்களுக்கும் போதிய எண்ணிக்கையில் ஆர்டிபிசிஆர் உபகர ணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்கு கூடுதலாக உபகரணங் களை வழங்குமாறு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago