சென்னை: கொட்டிவாக்கம் ஊராட்சியில் பணிபுரிந்த தற்காலிக பணியாளர்கள் 7 பேரை பணிநிரந்தரம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் ஊராட்சியில் 1981-ம் ஆண்டுமுதல் 2005 வரை 15 பேர் பிளம்பர், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர், துப்புரவுப் பணியாளர் என பல்வேறு பணிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தனர். பின்னர் கொட்டிவாக்கம் ஊராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே பணிபுரிந்த 15 பேரும் கடந்த 1997 ஆக.12 அன்றுநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்ட அரசாணைப்படி தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஹரிபரந்தாமன், கொட்டிவாக்கம் ஊராட்சியில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்த அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும்படி சென்னைமாநகராட்சிக்கு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி தரப்பில்உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை மாநகராட்சிதரப்பில், ``இந்த ஊழியர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி சார்பில் தற்காலிக பணியில் சேர்க்கப்படவில்லை. கொட்டிவாக்கம் ஊராட்சி நிர்வாகம்தான் இவர்களை பணியில் சேர்த்துள்ளது. ஆகவே,சென்னை மாநகராட்சி தங்களைபணிநிரந்தரம் செய்ய வேண்டுமெனஉரிமை கோர முடியாது. 1997-ம்ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையிலும் தேவைப்பட்டால் மட்டுமே தற்காலிக பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத் தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. எனவே இவர்களை பணிநிரந்தரம் செய்யுமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என வாதிடப்பட்டது.
அப்போது பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தரப்பில், ``மொத்தம் இருந்த 15 பேரில் 8 பேர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணிநிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர். எஞ்சிய 7 பேரைபணிநிரந்தரம் செய்ய மறுப்பது பாரபட்சமானது'' என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ``ஏற்கெனவே கொட்டிவாக்கம் ஊராட்சியாக இருந்தபோது தற்காலிக பணியாளர்களாக இருந்த 15 பேரில் 8 பேர் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 7 பேரை பணிநிரந்தரம் செய்ய மறுப்பது பாரபட்சமானது'' எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் எஞ்சிய 7 பேரையும் 12 வாரங்களில் பணிநிரந்தரம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago