டிச. 30-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மண்டல வானிலைஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச. 25) முதல்வரும் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 27, 28-ம்தேதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 84.2-86 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 71.6-73.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மழைப் பொழிவு எதுவுமில்லை. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும், குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரையும், தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 28-ம் தேதியும் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE