ஊழல் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்துக்கு தொழில் நிறுவனங்கள் வர விரும்புவதில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

கோவை: ஊழல் உள்ளிட்ட காரணங்களால்தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வர விரும்புவதில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் குழு கடந்த 20-ம் தேதி ஆய்வு செய்யச் சென்றது. ஆனால்,தமிழக முதல்வர் 21-ம் தேதிதான்அங்கு சென்றார். முதல்வர் அக்கறையின்மையுடன் செயல்பட்டு வருகிறார். நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசை வம்புக்கு இழுப்பதே முதல்வர் மகனுடைய வேலையாக உள்ளது. தமிழகத்தைவிட பாஜக ஆளும் மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிகமாக நிதி ஒதுக்குவதாக திமுக கூறி வருவது பொய்யாகும்.

பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் என 4 சாதிகள்தான் இந்தியாவில் உள்ளன. ஏழைஎன்ற சாதி இருக்கக் கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு. பிஹாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு வன்முறையை ஏற்படுத்தியுள்ளது. சாதி வாரிக் கணக்கெடுப்பு வன்முறையைத் தூண்டும். தமிழகத்தை தாண்டி 2-வது பொருளாதார மாநிலமாக உத்தர பிரதேசம் மாறியுள்ளது. திமுக ஆட்சி தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் தமிழகம் மேலும் பின்னுக்குத் தள்ளப்படும். ஊழல் உள்ளிட்ட காரணங்களால் தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வர விரும்புவதில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்