சேலம்: தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எதிர்பாராத மழையால் தென் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஓராண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்து, மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும். இல்லையேல் வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோம். ஜன. 21-ம் தேதி திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் கள் இறக்கி, சந்தைப்படுத்தப்படும். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கள்ளுக்கு ஆதரவாளராக இருந்தநிலையில், அவரின் ஆட்சியில்தான் சில நபர்களின் சூழ்ச்சியால் கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago