50-வது நினைவு நாளையொட்டி பெரியார் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

By செய்திப்பிரிவு

சென்னை: பெரியாரின் 50-வது நினைவு நாளையொட்டி, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். சென்னை, அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியாரின் உருவச் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள், சென்னை மேயர், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், "பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடை யாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த பெரியாரின் புகழைப் போற்றுவோம்’’ என தெரிவித்துள்ளார்.

சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் எம்.பி.-க்கள் எஸ்.ஆர்.விஜயகுமார், ஜெ.ஜெயவர்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து பெரியார் திடல் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பாமக அலுவலகத்தில் பெரியாரின் சிலைக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் தமிழக காங்கிரஸ் சார்பில் எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையிலான நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையிலான நிர்வாகிகள், மதிமுக சார்பில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

கோயம்பேட்டில் உள்ள தலைமையகத்தில் தேமுதிகபொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.தியாகராய நகரில் உள்ள தனதுஇல்லத்தில் பெரியாரின் படத்துக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத் தினார்.

சமூக வலைதளங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்