சென்னை - கோழிக்கோடுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்

By செய்திப்பிரிவு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் - கோழிக்கோடுக்கு சிறப்பு வந்தே பாரத் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து டிச.25-ம் தேதி அதிகாலை 4.30மணிக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் ( 06041 ) புறப்பட்டு, அதே நாள் பிற்பகல் 3.20 மணிக்கு கோழிக்கோடு அடையும். இந்த ரயில் பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, சோரனூர், திரூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

நாகர்கோவில் - சென்னை: இதுபோல, நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து டிச.25-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு ரயில் ( 06040 ) புறப்பட்டு, மறுநாள் நண் பகல் 12.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப் பள்ளி வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங் கிவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE