பொன்முடி வழக்கு தீர்ப்பால் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி-க்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம்.

அரசியலும், பொது வாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாமக-வின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது” என ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE