‘ஆக்டோபஸ்’ மென்பொருள் மூலம் ஐ.எஸ் ஆதரவாளர்கள் கண்காணிப்பு - கோவை காவல்துறை புதிய முயற்சி

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவை மாநகர காவல்துறையின் ‘ஆக்டோபஸ்’ மென்பொருளில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் 200 பேர் உட்பட ஆயிரம் பேரின் விவரங்கள் பதிவேற்றம் செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என கோவை காவல்துறை தெரிவித்துள்ளது.

கோவை மாநகர காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவு (ஐ.எஸ்), சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்.ஐ.சி) ஆகிய உளவுப் பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளின் சார்பில், மாநகரில் உள்ள காவல் நிலையங்கள் வாரியாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்கள் தொடர்பாக களத்துக்குச் சென்று தகவல்களை சேகரித்து தங்களது உயரதிகாரிகள் மூலம் மாநகர காவல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோவையில் கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவையில் உளவுப் பிரிவுகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஐ.எஸ், எஸ்.ஐ.சி ஆகிய உளவுப் பிரிவுகளின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் காவல் உயரதிகாரிகளுக்கு பரிமாற்றம் செய்யும் வகையிலும், சந்தேகத்துக்குரிய நபர்களை கண்காணிக்கவும், விஐபி-க்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தனியார் உதவியுடன் மாநகர காவல்துறையின் சார்பில் ‘ஆக்டோபஸ்’ என்ற பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்பட்டு, கடந்த மே மாதம் முதல் காவல்துறையினரால் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மென்பொருள் மூலம் ஆயிரம் பேரின் சுய விவரங்கள் சேகரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: "இந்த மென்பொருள் மூலம் மிக முக்கிய நபர்கள், முக்கிய நபர்களின் புகைப்படங்கள், அவர்களது குடியிருப்பு விவரங்கள், ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள், அவர்களது விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கையாகும். அதேபோல், மாநகரில் உள்ள காவல் நிலையங்கள் வாரியாக உள்ள கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பெட்டிக் கடைகள், கோயில்கள், மசூதிகள், கிறிஸ்துவ தேவாலயங்களின் எண்ணிக்கை விவரங்கள் ஆகியவையும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அனுதாபிகள் என சந்தேகிக்கப்படும் 200 பேரின் சுயவிவரங்கள் சேகரிக்கப்பட்டு இதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அவர்களது நடவடிக்கைகளை கண்காணித்து அப்டேட் செய்து வருகிறோம். அதேபோல், வலதுசாரி, இடதுசாரி ஆதரவாளர்கள், வகுப்புவாத கோட்பாடுகளில் ஆர்வம் உடையவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஆறு மாதத்தில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேரின் சுயவிவரங்கள் இந்த மென்பொருளில் பதிவேற்றப்பட்டுள்ளன. இதில் உள்ள விவரங்களை ஆணையர், துணை ஆணையர்கள் பார்க்கலாம். இதற்காக ரூ.10 லட்சம் செலவு செய்து பிரத்யேக சர்வரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்டோபஸ் மென்பொருளில் உள்ள ஆவணங்கள் உளவுத்துறை தகவல்களை சரிபார்க்க அதிகாரிகளுக்கு உதவும்" இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்