திறந்திருக்கும் வீடுகளில் நுழையும் கட்சி அல்ல: அதிமுக அழைப்புக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய நாடாளுமன்றத்தில் 92 உறுப்பினர்களை பிரதமர் மோடி இடைநீக்கம் செய்துள்ளார். நாடாளுமன்ற வரலாற்றில் இது போன்ற செயல் நடந்தது கிடையாது. நாடாளுமன்றத்தில் பேசவே கூடாது என்று சொல்வதற்கு பிரதமர் மோடி யார், அவர் செய்தியாளர்களை சந்திப்பது இல்லை. கேள்வி கேட்டாலும் பதில் சொல்வதில்லை.

மஹூவா மொய்த்ரா அம்பானி, அதானி குறித்து பேசியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே நாட்டு நலனுக்காக நிதி திரட்ட வேண்டும் என்று கூறி உள்ளார். தமிழகத்தில் இருக்கும் நிர்வாகிகள், மக்கள் அனைவரும் நிதி வழங்க வேண்டும். நாடாளுமன்றம், பேரவை உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை நிதியாக வழங்க வேண்டும்.

தற்போது பெய்த மழையால் தென் மாவட்டங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நீர்வழிப் பாதைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும். மத்தியக் குழு தமிழக அரசை பாராட்டி உள்ளது. ஆனால் தமிழக அரசை குறை கூறுகிறார்கள்.

காசி தமிழ்ச் சங்கமத்தில் பாஜகவினரைதான் அழைத்துச் செல்கின்றனர். பேரிடர் தொடர்பாக ஆளுநர் ஆலோசனை நடத்தி அங்கும் அரசியல் பேசுகிறார். கூட்டணி தொடர்பாக காங்கிரஸுக்கு கதவு திறந்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். திறந்திருக்கும் வீடுகளில் எல்லாம் நுழையும் கட்சி காங்கிரஸ் அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்