சென்னை: தமிழகத்தில் மழை வெள்ளப் பாதிப்பை பிரதமர் ஆய்வுசெய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்கள்அண்மையில் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டன. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள்முன்னெப்போதும் இல்லாத வகையில் மழைப்பொழிவை எதிர்கொண்டுள்ளன. எனவே, அவசர பேரிடர் நிவாரணம் தேவைப்படுகிறது. மத்திய அரசின் உடனடி தலையீடும் மீட்புப் பணிகளுக்காக ஆயுதப் படைகள் மற்றும் என்டிஆர்எப் பணியாளர்களை அனுப்புவதும் உடனடி தேவையாக இருக்கிறது.
இதற்கிடையே மீட்புப் பணிகளுக்கு ஏதுவாக இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மேலும், பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சேத மதிப்பீடுகளை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விரிவான நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் உடனடியாக கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago