மதுரை: கனமழையால் தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நெல்லை - செங்கோட்டை பிரிவில் இரு மார்க்கத்திலும் நேற்று இயக்கப்பட வேண்டிய முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. நெல்லை - பாலக்காடு எக்ஸ்பிரஸ் மற்றும் கன்னியாகுமரி - புதுச்சேரி வாராந்திர எக்ஸ்பிரஸ்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. திருவனந்தபுரம் - திருச்சி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப் படுகிறது.
நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயக்கப்படும். கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி - மதுரை இடையே இயக்கப்படும். நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - பெங்களூர் எக்ஸ்பிரஸ், நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ், நெல்லை - சென்னை - நெல்லை எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் நேற்று முதல் மதுரையில் இருந்து இயக்கப்படுகின்றன.
நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் திண்டுக்கலில் இருந்து இயக்கப்பட்டது. கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல்லில் இருந்தும், நெல்லை - ஜாம் நகர் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திலிருந்தும் இயங்கின. நெல்லை, மானாமதுரை, பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்படும் செங்கோட்டை - தாம்பரம் ரயில் ராஜபாளையம், விருதுநகர், மானாமதுரை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago