சென்னை: அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் அயலக தமிழர் தின விழாவில், இலக்கியம், கல்வி உள்ளிட்ட8 பிரிவுகளில் சிறப்பான செயல் பாடுகளுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அயலக தமிழர் தினம்: ஆண்டுதோறும் ஜன.12-ம் தேதிஅயலக தமிழர் தினமாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில், 2022 மற்றும் 2023-ம்ஆண்டுகளில் அயலகத் தமிழர்தினம் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
தொடர்ந்து 3-ம் ஆண்டாக ‘அயலகத் தமிழர் தினம் 2024’ விழா, அடுத்தாண்டு ஜன.11, 12 ஆகிய தினங்களில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளில் நடைபெற உள்ளது.
» காசி தமிழ் சங்கமம் 2.0 | சென்னையிலிருந்து முதல் குழுவின் பயணத்தை தொடங்கி வைத்த ஆளுநர்
» எண்ணூர் எண்ணெய் கசிவு | இதுவரை 48.6 டன் கழிவுகள் அகற்றம்: தமிழக அரசு
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் இவ்விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அமர்வுகள், சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கும் விதமாக, தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர்,வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவிக்கிறார்.
ஆன்லைனில் விண்ணப்பம்: எனவே, அயல்நாடுகளில் மேற்கண்ட 8 துறைகளில் தலைசிறந்து விளங்கும் தமிழர்கள் அயலகத் தமிழர் நலத்துறையின் https://nrtamils.tn.gov.in/en/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் அயலகத் தமிழர் தினத்தில் பங்கேற்பது, மற்றும் நிகழ்வுகள் தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago