சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் வரும் 18-ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். இதில் கோவை மாநாடு நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். தற்போது கட்சி பெயர், கொடியை பயன்படுத்தக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து பன்னீர்செல்வம் மேல்முறையீடும் செய்துள்ளார்.
இதற்கிடையில் மக்களவை தேர்தலும் நெருங்கி வருகிறது. அதற்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார்படுத்தவும், அதிமுகவை மீட்பது குறித்தும் விவாதிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 18-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் நடைபெறும் என பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதில், கோவையில் ஜன.6-ல் நடத்தப்பட உள்ள மாநாடு குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக வும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago