கடலூர்: கடலுார் மாவட்டம், மங்களூர் மற்றும் நல்லுார் வட்டாரத்துக்குட்பட்ட சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மானாவாரி விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர். பருவமழை தவறியதாலும், மழையின் அளவு குறைந்ததாலும் மக்காச்சோள கதிர்கள் வந்து, அதில் மணி பிடிக்காமல் போனது. அதையும் மீறி, சில இடங்களில் நன்றாக முளைத்த பயிர்கள் படைப்புழுவின் தாக்குதலால் முற்றிலுமாக அழிந்தன. வானம் பார்த்த பூமியான மானாவாரி விவசாய நிலங்களில், கடன் வாங்கி பயிரிட்ட சோளப் பயிர்கள் அழிந்து போனதால் இப்பகுதி விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு தரப்பில் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிகை விடுத்து வந்தனர். இந்த நிலையில் திட்டக்குடி தொகுதி எம்எல்ஏவும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வெ. கணேசன் கடந்த நவ. 1-ம் தேதியன்று, பாதிப்படைந்த மக்காச்சோள வயல்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் பயிர் பாதிப்பு குறித்து விரிவாக கேட்டறிந்தார். உடன் வந்த வேளாண் அதிகாரிகளும் பாதிப்பை தன்மையை எடுத்துரைத்தனர். 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டவை பாழானது மக்காச்சோள பயிருக்கு நிவாரணம் கிடைக்குமா ?“மக்காச்சோள பயிர் பாதிப்பு குறித்து, தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, வறட்சி நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அப்போது அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக அரசின் வேளாண் உயர்மட்டக் குழுவினர், பாதிக்கப்பட்ட மங்களூர், நல்லுார் வட்டாரங்களில் பயிர் பாதிப்பை நேரடியாக ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீடு விரைவில் கிடைக்கும் என விவசாயிகள் நம்பியிருந்த நிலையில், சென்னையில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளம் காரணமாக, மொத்த அரசு நிர்வாகமும் அதற்கான மீட்பு பணிகளில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டுள்ளது. கடலூர் மாவட்டம் மங்களூர் வட்டார வயல்வெளிகளில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள். உள்படம்: பயிர்களில் காணப்பட்ட படைப்புழுக்கள். இதனால், தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணம் கிடைக்குமா? - கிடைக்காதா? என்ற அச்சத்தில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். “ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். நகையை அடகு வைத்தும், கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் பெற்றும் பயிரிட்டோம். பயிர்க்கடனை அடைப்பதற்கு வழி தெரியாமல், அடகு வைத்த நகையை மீட்க முடியாமல் தவிக்கிறோம்.
விவசாயத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டே குடும்பத்தின் நடப்புச் செலவை மேற்கொள்வோம். ‘முதலுக்கே மோசம்’ என்ற நிலையில், என்ன செய்து என்று தெரியாமல் தவித்து வருகிறோம். வருடா வரும் பயிர்க்காப்பீடு செய்தும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் அதற்கான இழப்பீடு சரிவர கிடைப்பதில்லை” என்று இப்பகுதி விவசாயிகள் தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். இதுபற்றி வேளாண் துறை வட்டாரங்களில் விசாரித்த போது, “பயிர்களின் பாதிப்பு குறித்து முறையாக கணக்கிட்டு, சென்னைத் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் உரிய நிவாரணம் வழங்கப்படும். காப்பீடு செய்தவர்களுக்கு அதற்கான தகுதியான இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago