57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்படுகிறது: சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் 21-வது சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு, தமிழக அரசின் ஆதரவுடன் நடத்தும் 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, சென்னை ராயப்பேட்டையில் நேற்று தொடங்கியது. அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமையில், நடிகை பார்வதி நாயர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து விழாவை தொடங்கி வைத்தார். திரைப்பட விழா, டிச.21 வரைநடைபெறுகிறது. இதில் 57 நாடுகளின் 126 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. போட்டி பிரிவில் அநீதி, அயோத்தி, மாமன்னன், போர் தொழில், ராவணகோட்டம், செம்பி, விடுதலை உட்பட 12 தமிழ் படங்களும் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை நிதி வழங்கப்படும். இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிவிஆர் ஐநாக்ஸ் (சத்யம்), சாந்தம், சேரின் ஸ்கீரீன்ஸ், சீசன், 6 டிகிரி மற்றும் அண்ணா சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளாக திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. முதல் நாளான நேற்று அர்ஜெண்ட் கட் ஆப் (ஈரான்), தி பாத் ஆப் எக்ஸெலன்ஸ் (பிரான்சு), அன்லெதர் ஜாக்கெட் (ஈரான்), லிட்டில் பாரஸ்ட் (கொரியன்), பெர்பெக்ட் டேஸ் (ஜெர்மனி) உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தொடக்க விழாவில் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பின் துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் இ.தங்கராஜ், இயக்குநர்கள் மோகன் ராஜா, யூகி சேது, பிலிம்சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்