மரம் வேரோடு சாய்ந்ததில் பள்ளி மாணவர்கள் 16 பேர் காயம் @ மதுரை

By செய்திப்பிரிவு

மதுரை: மேலூர் அருகே அரசு பள்ளியில் வேரோடு மரம் சாய்ந்ததில் மாணவர்கள் 16 பேர் காயமடைந்தனர்.

மதுரை மேலூர் அருகே தெற்குத் தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று அரையாண்டுத் தேர்வுக்காக பள்ளி வளாகத்தில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பலத்த காற்று வீசியதில் மரம் வேரோடு சாய்ந்தது. இதில் மரக்கிளைகளுக்குக் கீழ் சிக்கிய 13 மாணவிகள், 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

இதில் ஒருவர் 7-ம் வகுப்பும், மற்றவர்கள் 9-ம் வகுப்பும் படிக்கின்றனர். தெற்குத் தெருவிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாணவர்களை ஆசிரியர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு, மாணவர்கள் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆட்சியர் சங்கீதா, மாணவர் களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலூர் அருகே தெற்குக் தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வேரோடு சாய்ந்த மரம்.

மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கா.கார்த்திகா, மாவட்டக் கல்வி அலுவலர் முத்துலெட்சுமி ஆகியோரும் மாணவர்களை சந்தித்து பேசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்