சென்னை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இந்துமதத் தலைவர்களை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் கூறி ஈரோட்டைச் சேர்ந்த அசிப் முஸ்தகீன் என்பவர் கடந்தாண்டு ஜூலை மாதம் சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அசிப் முஸ்தகீன் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மனுதாரர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டாலும் கூட, வழக்கு விசாரணையின்போது அவரை காலவரம்பின்றி சிறையில் வைத்திருக்க முடியாது. இந்த வழக்கில் மனுதாரர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி அசிப் முஸ்தகீனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் தீவிரவாத நோக்கத்துடன் தாக்குதலில் ஈடுபட்டால் மட்டுமே சட்டவிரோத செயல்கள் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இந்துமதத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவது எப்படி பயங்கரவாத செயலாகும் என்ற கேள்வி விவாதத்துக்குரியது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago