சமூகத்தில் மோதல்கள் மறைந்து நல்லிணக்கம் தேவை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

By செய்திப்பிரிவு

கடலூர்: ஒரு புதிய அடித்தளத்துக்காக நாம் அனைவரும் ஏங்குகிறோம். அவ்வாறு உருவாகும் போதுதான் மோதல்கள் மறைந்து, நல்லி ணக்கம் வேரூன்றிய ஒரு உல கத்தை நாம் உண்மையிலேயே கட்டமைக்க முடியும் என்று தமிழகஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித் தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நேற்று, ‘உலக ஒழுங்கை வடிவமைப்பதில் இந்தியக் கல்வித் துறையின் பங்கு' எனும் தலைப் பில் ஜி 20 கருத்தரங்கம் நடை பெற்றது. தமிழக ஆளுநரும், அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி கருத் தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

‘வாசுதேவ குடும்பகம்’ (உலகம்ஒரே குடும்பம்) எனும் பொருளில் டெல்லியில் செப்.9, 10 தேதிகளில் நடந்த ஜி 20 உச்சி மாநாடு வரலாற் றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்தியா முதன்முறையாக நடத்திய இந்த ஜி 20 உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியன் ஜி 20 நிரந்தர உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டது.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும், நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் மற்ற ஜி 20 உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவது இந்தியாவின் அர்ப்பணிப்பு என் பதை இந்த மாநாடு பிரதிபலித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது, பின்னர் ஆசியா உயர்ந்தது.

உலகத் தலைமையில் அமைதிக்கான வாக்குறுதிகள் இருந்த போதிலும், மோதலின் பயங்கரம், அணு ஆயுதங்களின் பிடி, நெருக்கடியான கால நிலை மாற்றம் மற்றும் எப்போதும் பெருகிவரும் அழுத்தம் ஆகியவற்றால் வறுமையின் நீண்ட நிழல் இன்னும் வீசுகிறது. குருட்டு சித்தாந்தங்கள், நம்பிக் கையூட்டும் கற்பனை வாதங்கள் ஆகியன சிதைந்த சமூகங்களை மட்டுமே விட்டுச் செல்கின்றன.

உண்மையான அமைதியை பிறப்பிக்க முடியாத ஏற்கெனவே உள்ள உத்தரவுகள் கைவிடப்பட வேண்டும். ஒரு புதிய அடித்தளத்துக்காக நாம் அனைவரும் ஏங்குகிறோம். அப்படி ஒன்று உருவாகும்போது தான் மோதல்கள் மறைந்து, நல்லிணக்கம் வேரூன்றிய ஒரு உலகத்தை நாம் உண்மையிலேயே கட்டமைக்க முடியும்.

தற்போது இந்தியாவின் முக்கியப் பங்களிப்புடன் புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகிறது. அதனால்தான் ஜி 20 டெல்லி பிரகடனங்கள் பொரு ளாதார வளர்ச்சிக்காக மட்டும் வரையறுக்கப்படவில்லை. மாறாக மனித மைய வளர்ச்சியைச் சுற்றியே அது உள்ளது என்று தெரிவித்தார்.

முன்னதாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராம கதிரேசன் வரவேற்று பேசுகையில், சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் கடந்த 100 ஆண்டுகளாக நாட்டை கட்டியெழுப்புவதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆற்றிய முக்கியப் பங்கை எடுத்து ரைத்தார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திருவள்ளுவன், புதுச்சேரி தொழில் நுட்பப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மோகன் ஆகியோர் பேசுகையில், நாட்டின் கல்வி வரை படத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டனர்.

சிண்டிகேட் உறுப்பினர்கள், புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் சிங்கார வேல் நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் வெவ்வேறு தலைப்புகளில் கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உரையாற்றினர். இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக உள்தர உத்தரவாத மையத்தின் இயக்குநர் அறிவுடை நம்பி மற்றும் துணை இயக்குநர்கள் ரமேஷ் குமார், கார்த்திக் குமார், பரதன், கே.ஜெய பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE