போகி என்பது பொருட்களை எரிப்பது அல்ல: சென்னை புகைமூட்டம் உணர்த்துவது என்ன?

By இந்து குணசேகர்

வழக்கத்துக்கு மாறாக இன்று அதிகாலை நிலவிய பனியுடன் கூடிய புகைமூட்டத்துக்கு சென்னை வாகன ஓட்டிகள் சற்று திணறிதான் போனார்கள். டெல்லி வாசிகளுக்கு இந்த சூழல் கடந்த சில ஆண்டுகளாக பழகிப் போனாலும் சென்னைக்கும், தமிழகத்தின் சில நகரங்களுக்கு இது சற்று மோசமான அனுபவமாகியுள்ளது.

பழையன கழிதலும் புதியன புகுதலுக்கும் அடையாளமாக கொண்டாடப்படும் போகி விழாவில் சூழியலுக்கு ஒவ்வாத நமது செயல்பாடுகளால் தமிழகத்தில் அங்கங்கே விபத்துகள் நேர காரணமாகி இருக்கிறது. ஏன் இவ்வளவு சூழல் மாசு... நாம் தொடர்ந்து எங்கு தவறிழைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு நினைவுப்படுத்தி இருக்கிறது இன்றைய தினம்...

காற்றில் ஏன் இவ்வளவு மாசு உருவாகி இருக்கிறது? அதற்காக நாம் செய்ய வேண்டியவை என்ன? இது பற்றி பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஜி.சுந்தர்ராஜன்.

1. போகி பண்டிகையில் வழக்கத்துக்கு மாறாக ஏன் இந்த வருடம் அதிக புகை மூட்டம்? அதற்கு என்ன காரணம்?

ஏற்கெனவே சூழியல் மாசு ஏற்பட்டுள்ள நகரத்தை மக்கள் தொடர்ந்து மாசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதுதான் உண்மை. ஏற்கனவே டெல்லி இம்மாதிரியான சூழலை எதிர் கொண்டது. அங்கு மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். விமான சேவை, போக்குவரத்து ஆகியவை அங்கு முடங்கியது நினைவிருக்கும்.

போகி என்பது பழைய மூடப் பழக்கங்களை எரித்து, நல்ல எண்ணங்களை நமக்குள் கொண்டுவருவதுதான் போகி விழாவின் உண்மையான பொருள். ஆனால் நாம் அதனை தவறாக புரிந்து கொண்டு வீட்டுக்குள் இருக்கும் பிளாஷ்டிக், டயர் போன்ற பொருட்களை ஏற்கெனவே மாசான ஒரு மாநிலத்தில் எரித்துக் கொண்டிருக்கிறோம். அதன் விளைவுதான் இது.

2. தீபாவளிக்கு முன் தினம் அரசாங்கம் சார்பில் மாசைக் கட்டுபடுத்த பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுபாடுகளை விதித்தார்கள்... போகி பண்டிகைக்கு ஏன் அத்தகைய ஏற்பாட்டை செய்யவில்லை?

போகிக்கு தமிழக மாசுக் கட்டுபாடு வாரியம் டயர் போன்ற பொருட்களை எல்லாம் எரிக்காதீர்கள் என்று கூறினார்கள். ஆனால் தீபாவளிக்கு காட்டிய விழிப்புணர்வை காட்ட தவறவிட்டு விட்டார்கள். இனி வரக்கூடிய காலக்கட்டங்களில் போகி போன்ற பண்டிகைகளின்போது விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்க வேண்டும்.

3. மக்கள் எத்தகைய பொருட்களை எல்லாம் எரிப்பதை தவிர்க்கலாம்?

என்னை கேட்டால்... எந்த பொருளையும் எரிக்க வேண்டாம் என்றுதான் கூறுவேன். புகையில் நல்ல புகை.. கெட்ட புகை இல்லை. புகை என்றாலே கெடுதல்தான் இருப்பினும் பிளாஷ்டிக், டயர் போன்றவைகளை எரிப்பதை தவிர்க்கலாம்.

4. மக்களிடம் மாசு குறித்த விழிப்புணர்வு கூடுதலாக ஏற்பட என்ன நடவடிக்கையில் அரசு இறங்க வேண்டும்?

சூழலில் அக்கறைக் கொண்ட சுற்றுச் சூழல் அமைப்புகள், கலாச்சார அமைப்புகள், அரசு, அரசியல் கட்சிகள் என அனைத்தும் போகி பண்டிகையன்று எரிப்பது தவறு என்று பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். போகி என்பது பொருட்களை எரிப்பது அல்ல என்று மக்கள் உணர வேண்டும்.

5. மாசு குறித்த விழிப்புணர்வு இளைய தலைமுறையிடத்தில் உள்ளதா?

நிச்சயமாக உள்ளது.. சமூக வலைதளங்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இருப்பினும் பள்ளிக் குழந்தைகள் பாடப்புத்தகத்தில் சூற்றுசூழல் மாசு குறித்தான தகவல்கள் அவர்களை கவரும் வண்ணம் இருந்தால், மாசினால் உண்டாகும் விளைவுகளை அவர்கள் எளிதாக உள்வாங்கிக் கொண்டு நிச்சயம் சூழல் காதலர்களாக உருவாகுவார்கள் என்பது என் நம்பிக்கை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்