மழையால் பாதித்த 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்க வேண்டும்: அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மின்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், டிச.4 முதல் 7-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோருக்கு டிச.18-ம் தேதி வரை அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு பகுதி மின் நுகர்வோரே இதனால் பயன்பெற முடியும்.

எனவே, 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து மின்நுகர்வோரும் பயன்பெறும் வகையில் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த டிச.30 வரை அவகாசம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மின்கட்டணம் செலுத்தும் கடைசி நாள் டிச.4 முதல் 7-ம் தேதி வரை உள்ள நுகர்வோருக்கு அபராதமின்றி செலுத்த வழங்கப்பட்ட கால அவகாசத்தை, வரும் 16-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறும்போது, 4 மாவட்டங்களில் அதிகன மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் முழு அளவில் திரும்பவில்லை. பலர் வேலைக்குச் செல்ல முடியாமலும், சொந்த தொழிலை மேற்கொள்ள முடியாமலும் வருவாய் இன்றி தவிக்கின்றனர். எனவே, வரும் 16-ம் தேதி வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியவர்களுக்கும் வரும் 18-ம் தேதி வரை அபராதம் இன்றி செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றனர். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகுறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்