சென்னை: புயல் பாதிப்புக்கான ரூ.6 ஆயிரம்நிவாரணத் தொகையை ரேஷன்கடைகள் மூலம் வழங்குவதுதொடர்பாக இன்றுமுதல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில்,நிவாரண விநியோகம் குறித்து,அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ‘மிக்ஜாம்’ புயலால் சென்னைஉள்ளிட்ட 4 மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கவும்,இந்த நிவாரணத்தொகையை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டார்.
பாதுகாப்பு ஏற்பாடு: இதன் அடிப்படையில், ரேஷன் கடைகளில் நிவாரணத்தொகை வழங்க மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்துகூட்டுறவுத் துறை அமைச்சர்கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிவாரணம் வழங்குவதற்காக ரேஷன் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், நிவாரணத்தை முறையாக கொண்டு சேர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுக்கு இன்றுமுதல் பயிற்சிவழங்குவது குறித்து விரிவானஆலோசனை மேற்கொள்ளப் பட்டது. இக்கூட்டத்தில், துறையின் செயலர் கே.கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், கூடுதல் பதிவாளர் ஜெ.விஜயராணி, சிறப்புப்பணி அலுவலர் எம்.பி.சிவன் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago