மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடக்க முடியாத நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்களை சிகிச்சை அறைகளுக்கும், ஆய்வகங்களுக்கும் அழைத்து செல்வதற்கான தள்ளுவண்டிகள், ஸ்ட்ரெச்சர் போன்றவை பழுதடைந்துள்ளதால் நோயாளிகள் சிரமத்தை போக்க கூடுதல் பேட்டரி வாகனங்களை இயக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, தென் தமிழகத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக திகழ்கிறது. அடித்தட்டு மக்களுடைய உயிர் காக்கும் கடைசி நம்பிக்கையாக இந்த மருத்துவமனை உள்ளது. ஒரு நாளைக்கு 3,500 உள்நோயாளிகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் உள் நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களை கடந்த காலத்தில் சிகிச்சை அறைகளுக்கும், ஆய்வகங்களுக்கும் அழைத்து செல்வதற்காக மருத்துவமனைப் பணியாளர்கள் முழுமையாக தள்ளுவண்டிகள், ஸ்ட்ரெச்சர்களை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கணக்கிடும் போது, பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை மிக குறைவு. இந்நிலையில் தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனைகளில் நடக்க முடியாத நோயாளிகளை அமர்ந்த நிலையில் அழைத்து செல்வதற்கு பயன்படும் தள்ளுவண்டிகள், படுத்த நிலையில் அழைத்து செல்லப்படும் ஸ்ட்ரெச்சர்கள் போன்றவை பழுதடைந்த நிலையிலே இயக்கப்படுகின்றன. அதன் சக்கரங்கள் சேதமடைந்து சரியாக சுழல முடியாமல் மிகுந்த சிரமப்பட்டே பணியாளர்கள், நோயாளிகள் தள்ளு வண்டிகள், ஸ்ட்ரெச்சர்களில் அழைத்து செல்கின்றனர்.
மேலும், குறைவான எண்ணிக்கையிலே இந்த வண்டிகள் உள்ளதால் சில நேரங்களில் நோயாளிகள், இந்த வாகனங்களுக்காகவும், அதனை தள்ளுவதற்கான பணியாளர்களுக்கும் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்தூத்துக்குடி, தேனி போன்ற பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இதுபோன்ற தள்ளுவண்டி போன்ற அடிப்படை வசதிகளால் தாமதம் ஏற்படும்போது சொந்த ஊர்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
தற்போது மருத்துவமனையில் 2 பேட்டரி வாகனங்கள் செயல்படுகின்றன. இந்த பேட்டரி வாகனங்கள், மருத்துவமனை வளாகத்தில் சத்தமே இல்லாமல் நோயாளிகளை அலுங்காமல் குலுங்காமல் பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்களில் இருப்பது போன்றே சைரன் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை அமர்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும் இந்த வாகனங்களில் அழைத்து செல்வதற்கான வசதிகள் உள்ளன. இந்த வாகனங்களில் நோயாளிகள் மிக எளிதாக மருத்துவமனையில் தரைத்தளம் முதல் அனைத்து அடுக்கு தளங்களிலும் உள்ள சிகிச்சை அறைகளுக்கும், ஆய்வகங்களுக்கு அழைத்து செல்ல முடிகிறது.
இந்த வாகனங்கள் பெரும்பாலும், அண்ணா பேருந்து நிலையம், தலைக்காயம் மற்றும் எலும்பு மறிவு அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தில் இயக்கப்படுகின்றன. இந்த கட்டிடத்தில் இந்த வாகனங்களை இயக்குவதற்காக மருத்துவமனையில் படிகட்டுகளுடன் சாய்வு தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பேட்டரி வாகனங்களை அதிகப்படுத்தினால், நோயாளிகள் சிரமம் இல்லாமல் விரைவாக சிகிச்சை பெற முடியும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago