சென்னை மக்களின் துயர் காலங்களில் துணை நிற்கும் என்எல்சி!

By ந.முருகவேல் 


விருத்தாசலம்: பழுப்பு நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரித்து தமிழகம் மட்டுமின்றி தென் இந்தியா முழுவதும் மின்சாரம் வழங்கி வரும் என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழகத்தில் அவ்வப்போது ஏற்படும் துயர் காலங்களில் சமூக பங்களிப்போடு சேவைகளையும் ஆற்றி வருகிறது. கனமழையின் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் தண்ணீர் தேங்கி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தமிழக அரசு தண்ணீரை வெளி யேற்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. சென்னையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றிட, மாநில அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், என்எல்சி சுரங்க முதன்மை மேலாளர் விவேகானந்தன் தலைமையில்ஒரு குழுவினர், சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் ராட்சத மின்மோட்டார்களுடன் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

\சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் வேளச்சேரி, வளசரவாக்கம், அயனம்பாக்கம், திருவேற்காடு ஆகிய பகுதியில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். என்எல்சி நிறுவனம் கடந்த காலங்களிலும் இதுபோல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக கடந்த 2015-ம்ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் சென்னை நகரம் தண்ணீரில் தத்தளித்தது. அப்போது என்எல்சி நிறுவனத்தின் நிலத்தடி நீர் கட்டுப்பாட்டு துறையினர் அங்கு சென்று தேங்கிய மழை நீரை ராட்சத மின் பம்புகள் மூலம் வெளியேற்றினர். 2001-ம் ஆண்டு சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது.

சென்னை வேளச்சேரி குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழைநீர்
என்எல்சி ராட்சத பம்ப் மூலம் வெளியேற்றப்படுகிறது.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோளுக்கிணங்க நெய்வேலியில் இருந்து தினசரி 500 லாரிகள் மூலமும், ரயில் மூலமூம் சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் வறட்சி நிலவியது. அப்போது என்எல்சி சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், அதனருகே உள்ள வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகிய ஏரிகளுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து வடக்குத்து கிராமத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்டது. அந்த தண்ணீர் வீராணம் தண்ணீர் எடுத்து செல்லப்படும் குழாய் வழியாக 2017-ம் ஆண்டு சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

2004-ம் ஆண்டு தமிழக கடலோர மாவட்டங்கள் சுனாமி தாக்குதலுக்குள்ளானது. அப்போது, அப் போதைய சுரங்க பொதுமேலாளர் செந்தமிழ்செல்வன் தலைமையிலான குழுவினரால் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் குடிநீர், உணவு உட்படஅத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. சுனாமியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்புப் பணியில் ஈடுபட் டதும் குறிப்பிடத்தக்கது. சென்னைவாசிகள் தண்ணீருக்கு தவிக்கும் போதும் தாகம் தீர்ப்பதோடு தற்போது தண்ணீரில் தத்தளிப் பவர்களையும் மீட்கும் பணியினையும் செய்து வரும் என்எல்சி தமிழகத்தில் ஒவ்வொரு இயற்கை பேரிடரின் போது, துயரமான நேரங்களில் தங்களால் இயன்ற துயர் துடைப்பு களப்பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது மட்டுமல்ல, பிற நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE