திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நேற்று மின்சார ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்தவரை, துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய திருவள்ளூர் ரயில்வே போலீஸாரை பயணிகள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். தெலங்கானா மாநிலம், கோதாவரி கிழக்கு, பீமாதி பகுதியைச் சேர்ந்தவர் தாத்தா ராவ்(60). இவர், சென்னையில் தங்கி பெயின்டிங் பணியில் ஈடுபட்டு வருகிறார். பணி நிமித்தமாக திருவள்ளூர் வந்த தாத்தா ராவ் பணிமுடிந்து, நேற்று மாலை சென்னை செல்வதற்காக திருவள்ளூர் ரயில் நிலையத்துக்குச் சென்றார்.
அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் புறநகர் மின்சார ரயில், ரயில் நிலையத்தின் 3-வது நடைமேடையில் நின்று புறப்பட்டபோது அவர் அந்த ரயிலில் ஏற முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக தாத்தா ராவ், கால் தவறி கீழே விழுந்தார். அப்போது, அங்கிருந்த திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் அன்பழகன், குமரேசன் ஆகிய இருவரும் சாமர்த்தியமாக செயல்பட்டு, ரயிலின் கீழ் பகுதியிலிருந்து தாத்தா ராவை இழுத்து, காப்பாற்றினர். கால்களில் சிறு சிராய்ப்பு ஏற்பட்ட தாத்தா ராவ், ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்தவரை, விரைவாக காப்பாற்றிய திருவள்ளூர் ரயில்வே போலீஸாரை ரயில் பயணிகள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago