கூடலூர்: முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் இரண்டாவது முறையாக 136 அடியாக உயர்ந்ததால், இடுக்கி மாவட்டத்துக்கு மீண்டும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை யின் உயரம் 152 அடியாக இருந்தாலும், அணையைப் பராமரித்த பின் முழு அளவு தேக்கிக் கொள்ளலாம். அதுவரை 142 அடி வரையே தேக்க வேண்டும் என்று 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 142 அடியை உச்ச அளவாகக் கொண்டு நீர் தேக்கப் படுகிறது. தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால், கடந்த காலங் களில் நீர்மட்டம் பெரியளவு உயரவில்லை. இருப்பினும், கடந்த மாதத்தின் 2-வது வாரங்களில் பெய்த மழையால் நீர்மட்டம் வெகுவாய் உயர்ந்தது.
நவ.24-ம் தேதி 136 அடியை எட்டியதால், இடுக்கி மாவட்டத்துக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, 137 அடி மற்றும் 138 அடியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட அபாய எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஆனால், மாறுபட்ட பருவ நிலையால் நீர்மட்டம் உயரவில்லை. சில நாட்களுக்கு முன்பு 135.5 அடியாக குறைந்த நீர்மட்டம், நேற்று பிற்பகல் 2 மணிக்கு மறுபடியும் 136 அடியாக உயர்ந்தது. இதையடுத்து இரண்டாம் முறையாக முதற்கட்ட அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், 142 அடியை உச்சவரம்பாகக் கொண்டு அபாய அறிவிப்புகளை வெளியிட்டால் அதைக்கூட ஏற்க லாம். ஆனால், 136 அடிக்கே இந்த அறிவிப்புகளை வெளியிடுவது கண்டனத்துக்கு உரியது என்றார். நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், 2018-ல் அணையில் இருந்து கேரளப் பகுதிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இதில் இடுக்கி மாவட்டம் பாதிக்கப்பட்டதாக கேரள அரசு குற்றம் சாட்டியது. அதிகப்படியான நீரை கேரளப் பகுதி வழியேதான் வெளியேற்ற முடியும் என்பதால், அணையில் 3 கட்டங்களாக எச்சரிக்கை அறிவிப்புகளும், அதன் பின்பு மூன்று கட்டங்களாக வெள்ள அபாய எச்சரிக்கையும் வெளியிடப் படுகிறது என்றனர். தற்போது, அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,072 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 511 கனஅடி யாகவும் உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago