6 மாதமாக ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தம்: சிவகங்கையில் 2,000+ மனுக்கள் நிலுவை

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: மகளிர் உதவித் தொகை வழங்கும் பணிக்காக தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக் கணக்கான விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன.

ரேஷன் கார்டு உள்ளவர் களுக்கு இலவச அரிசி மற்றும் சலுகை விலையில் சர்க்கரை, கோதுமை, பாமாயில், மண் ணெண்ணெய், துவரம் பருப்பு போன்றவை வழங்கப் படுகின்றன. இது தவிர பெரும்பாலான அரசு நலத் திட்டங்கள் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப் படுகின்றன.

அந்தியோதயா அன்ன யோஜனா (ஏஏஒய்), முன்னுரிமை பெற்ற அட்டை ( பிஹெச்ஹெச் ), முன்னுரிமை அற்ற அட்டை ( என்பிஹெச்ஹெச் ), சர்க்கரை அட்டை ( என்பிஹெச்ஹெச்-எஸ் ), பொருட்களில்லா அட்டை ( என்பிஹெச்ஹெச்-என்சி ) என 5 வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

புதிய ரேஷன் கார்டு பெறுவது, முகவரி மாற்றம், பிழைத் திருத்தம் போன்றவைக்கு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, கடந்த ஜூலை மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை உணவு வழங்கல் துறை நிறுத்தியது.

இதையடுத்து முகவரி மாற்றம், பிழைத் திருத்தம் போன்றவைக்கு மட்டும் விண்ணப்பிக்க 3 மாதங்களுக்கு முன்பு அனு மதிக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்களாகியும் புதிய ரேஷன் கார்டு வழங்குவது இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு அலைகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல்லா யிரக்கணக்கான விண்ணப்பங்கள் தேக்கமடைந்துள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட் டத்தில் மட்டும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும் பத்தினர் காத்திருக்கின்றனர்.

இது குறித்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோர் கூறியதாவது: ஏற்கெனவே பெற்றோர் கார்டுகளில் இருந்து நீக்கம் செய்த பின்னரே, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோம். தற்போது பெயர்களை நீக்கி விட்டதால், எங்களது பெயர்கள் எதிலும் இல்லாத நிலை உள் ளது. இதனால் மருத்துவக் காப் பீட்டுத் திட்ட அட்டை பெற முடிய வில்லை. அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்கின்றனர். சில இடங்களில் முகவரிக்கு ரேஷன் கார்டு கேட்கின்றனர். எனவே, மகளிர் உரிமைத் தொகை திட்டப்பணி முடி வடைந்துவிட்டதால், புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை உடன டியாக தொடங்க வேண்டும். இவ் வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘2024 ஜனவரியில் இருந்து புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்