மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை வருகை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை சென்னை வருகிறது.

‘மிக்ஜாம்’ புயல் மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடந்த 7-ம் தேதி சென்னை வந்தமத்திய பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங்,பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின்னர், தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வெள்ள சேதங்களைச் சீரமைக்க இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை தெரிவித்த முதல்வர், நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கிடையே, மாநில பேரிடர் நிதியாக ரூ.450 கோடியை தமிழகத்துக்கு வழங்க பிரதமர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மத்தியதொழில் முனைவோர் மற்றும்நீர்வளத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சென்னைக்கு நேற்று வந்தார். மழை வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரதராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் முடிச்சூர் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

2 நாள் சுற்றுப்பயணம்: இந்நிலையில், மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வுசெய்வதற்காக மத்திய குழு11-ம் தேதி (நாளை) சென்னைவருகிறது.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை ஆய்வுசெய்ய உள்ளனர். 12-ம் தேதிதலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி செல்ல குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்