தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் நடைபெறும் கொலைகளுக்கு தொழில் வளம் குறைவாக இருப்பதே காரணம் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார்.
திருநெல்வேலியில் நடைபெற்றபொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி வந்த அவர்,விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வருங்காலங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்கள், அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தேர்தல் நேரத்தில் தங்கள்எதிர்ப்பைக்காட்ட மறந்து விடுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு குறை சொல்லும் அளவுக்கு இல்லை. தென் மாவட்டங்களில் நடைபெறும் கொலைகளுக்கு, தொழில் வளம் குறைவாக உள்ளதே காரணம்.
எனவே, தென் மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகளை ஏற்படுத்த வேண்டும். மக்களவைத் தேர்தலில் நான் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago