மேட்டூர் அணை நீர்மட்டம் 68 அடியாக உயர்வு

By செய்திப்பிரிவு

மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 2,510 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 3,297 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்துகுடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்தைக் காட்டிலும், தண்ணீர் திறப்பு குறைவாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி, அணையின் நீர்மட்டம் 67.92 அடியில் இருந்து 68.22 அடியாகவும், நீர் இருப்பு 30.94 டிஎம்சியில் இருந்து 31.19 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக நீடித்தது. இந்நிலையில், நேற்று விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE