அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கி கார் பரிசு பெற்ற டிரைவர்: ஒரே சுற்றில் 8 காளைகளை அடக்கி சாம்பியனான ரகசியம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை ஒரே ஒரு காளையை மட்டும் அடக்கிய டிரைவர் ஒருவர், இன்று ஒரே சுற்றில் 8 காளைகளை அடக்கி காரை பரிசாக பெற்று எல்லையில்லா ஆனந்தமடைந்துள்ளார்.

உச்சநீதிமன்ற தடையால் 2015, 2016-ம் ஆண்டு உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. மாணவர்கள் போராட்டத்தால் இந்த ஆண்டு வழக்கமான மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் பழைய உற்சாகத்துடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்தது. கடந்த காலங்களில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் புல்லட்தான் உச்சப்பரிசாக வழங்கப்படும். கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் பெற்ற வரவேற்பால் சிறந்த காளைக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. அந்த பரிசை இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டை மான் காளை தட்டிச் சென்றது.

அதனால், இந்த ஆண்டு செந்தில் தொண்டைமான் காளை, பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இன்று அலங்காநல்லூர் வாடிவாசலில் களம் கண்டது. ஆனால், வாடிவாசலை விட்டு நகராமல் சில நிமிடங்கள் நின்றது. அதன்பிறகே வெளியேறி மாடுபிடி வீரர்களை நோக்கி சீறி பாய்வதும், நாலாபுறமும் சுற்றி மிரள வைப்பதுமாக அருமையாக நின்று விளையாடியது. விழா கமிட்டினரே இந்த காளையை பாராட்டினர். ஆனால், திட்டமிட்டப்படி குறிப்பிட்ட நேரத்தில் வாடிவாசலை விட்டு வெளியேறிருந்தால் இந்த காளைக்கு கார் பரிசு கிடைக்கவில்லை. அதனால், சிறப்பாக வாடிவாசலில் நின்று விளையாடிய காளை மிளகரணையை சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளை இந்த முறை சிறந்த காளை பரிசை தட்டிச் சென்றது.

காளை உரிமையாளர் சந்தோஷூக்கு ரெனால்டு கீவிட் கார் பரிசாக வழங்கப்பட்டது. அவர் நம்மிடம் பேசுகையில், ''என்னோட காளை பாண்டியை சொந்த தம்பியா நினைத்து வளர்த்து வருகிறேன். நான் இல்லாமல் சாப்பிட மாட்டான். பல வாடிவாசல்களை என்னோட காளை பார்த்துவிட்டது. ஏராளமான பரிசுகளை வாங்கிக் கொடுத்துள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய பரிசை வாங்கி கொடுக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. பாரம்பரியமாக எங்க வீட்டில் எங்க தாத்தா, எங்கப்பா, இப்போது நான் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறோம். எங்க தாத்தா, அப்பா காலத்தில் அவர்கள் வளர்த்த காளைகளை வாங்கி கொடுக்காத பேரை என்னோட காளை எனக்கு எனக்கு வாங்கி கொடுத்துள்ளது. எதிர்காலத்துல ஒரு கார் வாங்கனும்னு என்னோட ஆசையா இருந்தது. அந்த ஆசையை என்னோட காளை நிறைவேற்றி தந்து எல்லையில்லா மகிழ்ச்சியடைய வைத்து விட்டது'' என்றார்.

அதுபோல், இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த எஸ்.அஜய்குமார் (வயது 22) சிறந்த மாடுபிடி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஹூண்டாய் இயான் என்ற கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் நேற்றுபாலமேட்டில் ஒரு காளையை அடக்கியுள்ளார். அந்த காளை காலில் குத்தி கட்டுப்போடப்பட்டது. அந்த காயத்துடனே நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம் இறங்கினார். கடைசி ரவுண்டில் இறங்கி 8 காளைகளை அடக்கி அலங்காநல்லூர் சாம்பியனார். அஜய்குமார், ஐடிஐ படித்துள்ளார். தந்தை செல்வம். தாய் செல்வி. ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அஜய்குமாருக்கு சரியான வேலை கிடைக்காமல் சில சமயங்களில் காரில் டிரைவராக வேலைக்கு சென்றுள்ளார். 'இப்போது சொந்தமாகவே காரே வந்துவிட்டது, இனி டிரைவராகி குடும்பத்தை காப்பாற்றுவேன்' என்றார் அஜய்குமார்.

அவர் நம்மிடம் பேசுகையில், ''ரெண்டு மூனு வஷமாதான் காளைகளை பிடிக்க கற்றுக்கொண்டு வருகிறேன். அதற்கு என்னுடைய குரு நாகராஜ்தான் காளையை எப்படி பிடிக்கணும்னு கற்றுக் கொடுத்தார். எப்போதுமே நண்பர்களுடன் ஒரு டீமாக சேர்ந்தே காளையை அடக்கும் பயிற்சியை செய்வோம். அலங்காநல்லூரில் ஒன்று ரெண்டு காளைகளை பிடிக்கன்னும்னு வந்தேன். ஜல்லிக்கட்டு களத்தில் என்னுடைய நண்பர்கள் செய்த உதவியாலும், குருநாதர் கற்றுக் கொடுத்த பயிற்சியாலுமே இவ்வளவு காளைகளை அடக்க முடிந்தது. சொந்த ஊரிலே காளைகளை அடக்கி ஒரே நாளில் காரும், பேரும் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. என்னோட நண்பர்களுக்கும், குருவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்