தருமபுரி எம்பி செந்தில்குமாரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்: 46 பேர் கைது

By செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி மக்களவை உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமாரை கண்டித்து நேற்று தருமபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினரை போலீஸார் கைது செய்தனர். ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் தொடர்பாக தருமபுரி மக்களவை உறுப்பினர் (திமுக) டி.என்.வி.செந்தில்குமார் அவதூறான கருத்து தெரிவித்த தாகக் கூறி, தருமபுரி மாவட்ட பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

மாவட்ட பொதுச் செயலாளர்கள் முருகன், வெங்கட்ராஜ், பிரவீன், மாவட்ட பொருளாளர் காவேரிவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகக் கூறி, பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட 46 பேரை, தருமபுரி டிஎஸ்பி செந்தில் குமார் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE