திமுக இளைஞரணி சேலம் மாநாடு டிச.24-க்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு காரணமாக, சேலத்தில் டிச.17-ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு டிச.24-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் டிச.17-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணியினர் மேற்கொண்டு வந்தனர். இந்தச் சூழலில், ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் பெருவெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மீட்பு, நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திமுக இளைஞரணி 2-வது மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழை, வெள்ளம் காரணமாக சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி மழை - வெள்ள நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, டிச.17-ம் தேதி சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டு, டிச.24-ம் தேதி நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்